புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள்களுக்கான நேரம் கணிசமாக அதிகரிக்கப்படவில்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வினாத்தாள்களுக்கான நேரம் கடந்த ஆண்டைப் போலவே இருக்கும் என திணைக்களத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் ஆணையாளரான காயத்திரி அபேகுணசேகர தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வினாத்தாள் ஒன்றிற்கு விடையளிக்க வழங்கப்பட்ட 45 நிமிடங்கள் ஒரு மணிநேரமாக அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்கு விடையளிக்க ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புலமைப்பரிசில் பரீட்சை வழமையான ஞாயிற்றுக்கிழமைக்கு மாறாக சனிக்கிழமையன்று நடைபெறுவதாக எ பரீட்சைகள் ஆணையாளர் நாயகமான எல்.எம்.டி.தர்மசேன இதன் போது தெரிவித்தார்.

பரீட்சையின் முதல் பகுதியானது காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி 10.30 மணிக்கு நிறைவடையும், இரண்டாம் பகுதியானது இடைவேளையைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு முதல் மதியம் 12.15 மணியுடன் முடிவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தாண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 2,943 நிலையங்களில் மொத்தம் 340,508 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள மாணவர்களுக்கு வசதியாக 108 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், 496 ஒருங்கிணைப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post