சம்பந்தப்பட்ட மின் நிலையங்களுக்கு உரிய எரிபொருள் இருப்புகள் கிடைத்துள்ளதால் மறு அறிவித்தல் வரை மின்வெட்டு இருக்காது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த மீளாய்வின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக PUCSL தலைவரான ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு விடுத்துள்ள விசேட அறிக்கை யொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் உயர்தரப் பரீட் சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஏற்படக் கூடிய அசௌகரியங்களும் இந்தத் தீர்மானத்தில் தாக்கம் செலுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், இன்று மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ள நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கியின் ஊடாக சுமார் 300 மெகாவாட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது என்றார்.
Post a Comment