அத்துமீறிய இந்திய மீனவர்கள் 22 பேர் கைது - Yarl Voice அத்துமீறிய இந்திய மீனவர்கள் 22 பேர் கைது - Yarl Voice

அத்துமீறிய இந்திய மீனவர்கள் 22 பேர் கைதுகாரைக்கால் மற்றும்  நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.

காரைநகரை அண்டிய கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு ரோலர்களில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 22 பேர் கைது செய்யப்பட்டு மயிலிட்டி துறைமுகத்திற்கு  கொண்டு வரப்பட்டனர். 

இவர்கள் தொழிலில் ஈடுபட்ட படகுகள் கடற்படையால் கைது செய்யப்பட்டதுடன் படகிலிருந்த மீனவர்களுக்கு கொரோனா தொற்று  தொடர்பிலும் மலேரியா தொற்று தொடர்பிலும் சுகாதாரத்துறை யினரால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதனைத் தொடர்ந்து குறித்த 22 பேரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post