யாழில் 5 மாத குழந்தையோடு தலைமறைவான கணவன்! பொலிஸில் மனைவி முறைப்பாடு - Yarl Voice யாழில் 5 மாத குழந்தையோடு தலைமறைவான கணவன்! பொலிஸில் மனைவி முறைப்பாடு - Yarl Voice

யாழில் 5 மாத குழந்தையோடு தலைமறைவான கணவன்! பொலிஸில் மனைவி முறைப்பாடுயாழ் இளவாலையில் 5 மாத குழந்தையோடு தலைமறைவான கணவனைத் தேடி மனைவி இளவாலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கணவன் 5 மாதப் பிள்ளையை தூக்கிச் சென்றமை தொடர்பில் இளவாலைப் பொலிசில் முறையிடப்பட்டதனையடுத்து பொலிசார் மல்லாகம்  நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். 

இதடையடுத்து கணவனை குழந்தையோடு    நீதிமன்றில் முற்படுமாறு கோரியதற்கிணங்க பிள்ளையின்றி நீதிமன்றில் முன்னிலையான கணவரிடம் குழந்தை 5 மாத பாலூட்டும் குழந்தை என்பதற்கிணங்க தாயாரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் இடைக்கால கட்டளை வழங்கிய நிலையில் குழந்தையை தாயாரிடம் ஒப்படைக்காது கணவர் குழந்தையோடு நேற்றைய தினம் தலைமறைவாகியுள்ளார்.

இதையடுத்து மனைவி இளவாலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதோடு  தாயார் குழந்தையை பல இடங்களிலும் தேடி அலைகின்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post