தனியார் துறையினருக்கு ரூ.5,000 வழங்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதம்! - Yarl Voice தனியார் துறையினருக்கு ரூ.5,000 வழங்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதம்! - Yarl Voice

தனியார் துறையினருக்கு ரூ.5,000 வழங்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதம்!

 

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவை தனியார் துறையினருக்கும் வழங்குவதற்கு அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டுமென கோரி நிறுவனங்களுக்கு இடையிலான ஊழியர் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கருத்திற்க் கொண்டு இந்த விடயத்தை பரிசீலிக்குமாறு ஒன்றியம் கோரியுள்ளது.

வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் போது ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கமும் நன்மைகளைப் பெற வேண்டும் என்றும், தனியார் துறை ஊழியர்களுக்கும் ரூ.5,000 வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


நாட்டில் உற்பத்தி செயல்முறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் 80% தனியார்துறை உள்ளடக்கியது என நிறுவனங்களுக்கு இடையேயான ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 60% ஆனவர்கள் ரூ.25,000க்கும் குறைவாகவே வருமானத்தை ஈட்டுகின்றனர் என்றும், ரூ.5,000 கொடுப்பனவை வழங்குவதன் மூலம் தனியார் துறை ஊழியர்களுக்கு இடையே உள்ள துயரங்களை நிவர்த்தி செய்ய முடியும் என சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post