டாங்கி கவசத்தையும் ஊடுருவி பார்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ள இந்திய நிறுவனம் !! - Yarl Voice டாங்கி கவசத்தையும் ஊடுருவி பார்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ள இந்திய நிறுவனம் !! - Yarl Voice

டாங்கி கவசத்தையும் ஊடுருவி பார்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ள இந்திய நிறுவனம் !!



மும்பையை மையமாக கொண்டு இயங்கி வரும் அஜ்னாலென்ஸ் எனும் தனியார் பாதுகாப்பு துறை நிறுவனம் டாங்கி கவசத்தை தாண்டி பாரக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளது.
 
AjnaESAS என பெயரிடபட்டுள்ள இந்த அமைப்பானது 360 டிகிர கோணத்திலும் வீரர்கள் டாங்கியை விட்டு வெளியே வராமலேயே இரவிலும் பகலிலும் வெளியே நடப்பதை பார்க்க உதவும்.

அதாவது அதிக திறன் வாய்ந்த இரவு மற்றும் பகலில் படம்பிடிக்கும் கேமிராக்களை பயன்படுத்தி வெளியே நடப்பதை டாங்கியின் உள்புறம் இருந்து கொண்டே சுற்றிலும் பார்க்க முடியும்.

அஜ்னாலென்ஸ் நிறுவனம் இதுபற்றி வெளியிட்டு உள்ள தகவலின்படி இந்த AjnaESAS அமைப்பின் சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாகவும் விரைவில் இந்திய டாங்கிகளில் இது பொருத்தப்படும் எனவும் கூறியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post