சர்வதேச போட்டியில தங்கப் பதக்கம் வென்ற இந்துகாதேவிக்கு பணப்பரிசில் வழங்கி வைப்பு - Yarl Voice சர்வதேச போட்டியில தங்கப் பதக்கம் வென்ற இந்துகாதேவிக்கு பணப்பரிசில் வழங்கி வைப்பு - Yarl Voice

சர்வதேச போட்டியில தங்கப் பதக்கம் வென்ற இந்துகாதேவிக்கு பணப்பரிசில் வழங்கி வைப்புபாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கத்தினை வென்று தாயகத்திற்கு பெருமை சேர்த்த முல்லைத்தீவு - கரிப்பட்டமுறிப்பு பகுதியினைச் சேர்ந்த கணேஷ் இந்து காதேவிக்கு ,அவருடைய இல்லத்துக்கு நேரடியாக சென்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களால் 18.02.2022 இன்று பணப்பரிசில் கையளிக்கப்பட்டது. 

குறிப்பாக அமெரிக்கா தமிழ் உறவுகள் வழங்கி வைத்த 1,25000 பெறுமதியான பணப்பரிசிலே இவ்வாறு கையளிக்கப்பட்டது. 

இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்   சின்னராசா லோகேஸ்வரன்,மற்றும், கரைதுறைப்பற்று பிரதேசசபையின் உபதவிசாளர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post