பொருட்களின் விலை அதிகரித்தாலும் கட்டணத்தை அதிகரிக்கவில்லை! நியாயமான சேவையை வழங்குவதாக அழகக சம்மேளனம் தெரிவிப்பு - Yarl Voice பொருட்களின் விலை அதிகரித்தாலும் கட்டணத்தை அதிகரிக்கவில்லை! நியாயமான சேவையை வழங்குவதாக அழகக சம்மேளனம் தெரிவிப்பு - Yarl Voice

பொருட்களின் விலை அதிகரித்தாலும் கட்டணத்தை அதிகரிக்கவில்லை! நியாயமான சேவையை வழங்குவதாக அழகக சம்மேளனம் தெரிவிப்புகொரோனா பெருந்தொற்று நிலைமை காரணமாக பொருட்களின் விலைகள் அதிகரித்தாலும் தாம் கட்டணத்தை அதிகரிக்காது  நியாயமான  சேவைகளையே மேற்கொண்டு வருவதாக வடக்கு மாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நாடாத்திய ஊடக சந்திப்பிலேயே சங்கத்தின் பிரதிநிதிகளௌ இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், எமது வடமாகாண அழகக சங்கங்களின் சம்மேளன எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் எமது
மாவட்ட மற்றும் பிரதேச சங்கங்களின் செயற்பாடுகளை சீர் குலைக்கும் வகையில் எமது தொழிலைஅடையாளப்படுத்தும் வகையிலானதும் எமது தொழிற்சங்கத்தை சுட்டி நிற்கும் வகையிலான இலட்சினை மற்றும் பெயர் என்பனவற்றை உள்ளடக்கியதாக வடமாகாணத்துக்குள்ளே ஒரு சில
அமைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாம் அறிகின்றோம்.

இருப்பினும் வடமாகாணத்திலே
சம்மேளனத்தின் ஆளுகைக்குட்பட்ட ஐந்து மாவட்ட சங்கங்களிற்கோ அல்லது அதன் கிளைச்சங்கங்களிறகோ எந்த விதமான ஒரு தொடர்பும் கிடையாது என்பதை வடமாகாண அழக்க
சமாசங்களின் சம்மேளனத்தினர் என்ற வகையில்
தெரியப்படுத்துகிறோம். 

எனவே இவ்வாறான போலி அமைப்புக்களிடம் எமது தொழிலாளர் சார்ந்த குடும்பங்களுக்கான உதவிகளை யாரும் வழங்க வேண்டாம் என்று தயவுடன் வேண்டிக்கொள்வதோடு
இதனால் ஏற்படும் எந்தவிதமான பிரச்சினைகளுக்கும் எமது தொழிலாளர் சார்பான தொழிற்சங்கமாகிய நாங்கள் பொறுப்பல்ல என்பதையும் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.

அத்தோடு இதுவரை காலமும் எமது தொழிலாளர் சார்ந்த அங்கத்தவர்களின் குடும்பத்தினரின் வாழ்வாதார உதவி மற்றும் கல்வி சார் உதவிகள் மரண கொடுப்பனவுகள் 
நோய்வாய்பட்டவர்களுக்கான கொடுப்பனவுகள் என்பவற்றை எமது தொழிற்சங்கங்களின் ஊடாகவும் அரசியல்.பிரமுகர்களின் ஊடாகவும் அரச உதவி ஊடாகவும் தனவந்தர்களின் உதவி ஊடாகவும் புலம் பெயர்வாழ் அன்பு உறவுகளின் உதவிகள் ஊடாகவும் இன்று வரை  மனிதாபிமான பணிகளாக
செய்து வருகின்றோம்.

எதிர்காலத்தில் எமது அங்கத்தவர்களுக்கும் அவர்கள் சார்ந்த குடும்பத்தினர்களுக்கும் உதவித்
திட்டங்களை வழங்க வடமாகாணத்திலே வடமாகாண அழகக சமாசங்களின் சம்மேளனத்தினாலே
அதன் நேரடி கண்கானிப்பின் கீழ் ஐந்து மாவட்ட மற்றும் கிளை சங்க பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக வடமாகாண அழகக உறவுகளின் ஆதரவுக் கரங்கள் எனும் திட்டத்தின் கீழ்
எமது அங்கத்தவர்கள் மற்றும் தனவந்தர்கள் அரச அதிகாரிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள்
அரசியல் பிரமுகர்கள் புலம் பெயர் வாழ் எமது அன்பு உறவுகள் ஆகியோரின் உதவிகளை பெற்று
வழங்கும் திட்டத்தினையும் இன்று முதல் முன்னெடுக்க உள்ளோம் என்பதை அனைவருக்கும்
அறியத்தருகின்றோம்.

அத்தோடு தற்போது அண்மைய இரண்டு வருடங்களாக கொவிட் - 19 தொற்று நோய் காரணமாக தொழிற்சங்க செயற்பாடுகளில் ஏற்பட்டிருந்த சிறு தொய்வு நிலைகள் அனைத்தும் ஐந்து மாவட்டங்களிலேயும் மிக விரைவாக கட்டம் கட்டமாக சீர் செய்யப்படவுள்ளது என்பதையும்
இவ் வேளையில் அறியத்தருவதோடு எமது அங்கத்தவர்கள் அனைவரும் ஒற்றுமையாக
செயற்படுவதன் ஊடாக மட்டுமே தொடர்ச்சியாக எமது தொழிற் சங்கமானது வெற்றிப் பாதையிலே
இலட்சியத்தை நோக்கி பயணிக்க முடியும்- என்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post