பருத்திதுறையில் மீனவர்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு சுமந்திரன், சாணக்கியன் எம்பிக்கள் ஆதரவு! - Yarl Voice பருத்திதுறையில் மீனவர்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு சுமந்திரன், சாணக்கியன் எம்பிக்கள் ஆதரவு! - Yarl Voice

பருத்திதுறையில் மீனவர்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு சுமந்திரன், சாணக்கியன் எம்பிக்கள் ஆதரவு!பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியனும் சென்று ஆதரவினை வழங்கியுள்ளனர்.

அத்தோடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஸ் மற்றும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் உள்ளிட்டவர்களும் சென்று மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலைக் கண்டித்தும் வத்திராயன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 2 மீனவர்களுக்கு நீதி கோரியும் தொடர்ந்து நான்கு நாட்களாக நடைபெற்று வருகின்ற இந்த போராட்டத்திற்கு பல தரப்பினரும் தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையிலேயே மேற்குறிப்பிட்ட அரசியல் பிரதிநிதிகளும் தமது ஆதரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post