யாழில் ஊடகவியலாளரை தாக்கியவர் வசமாக சிக்கினார்! - Yarl Voice யாழில் ஊடகவியலாளரை தாக்கியவர் வசமாக சிக்கினார்! - Yarl Voice

யாழில் ஊடகவியலாளரை தாக்கியவர் வசமாக சிக்கினார்!யாழ். சாவகச்சேரியில் ஊடகவியலாளரை தாக்கி உயிர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த 31ஆம் திகதி மதியம் கடமை முடித்து சாவகச்சேரி கச்சாய் வீதியால் வீடு திரும்பிய ஊடகவியலாளரை வேனில் வந்தவர்கள் மோத முற்பட்டதுடன்இ அவரை தாக்கி காயப்படுத்தியிருந்தனர்.

இது தொடர்பாக ஊடகவியலாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

அத்துடன் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் அதன் சாரதி மீதும் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post