காதல் விவகாரம்! கோண்டாவிலில் வீடு புகுந்து தாக்குதல்! மூன்று பேர் கைது! - Yarl Voice காதல் விவகாரம்! கோண்டாவிலில் வீடு புகுந்து தாக்குதல்! மூன்று பேர் கைது! - Yarl Voice

காதல் விவகாரம்! கோண்டாவிலில் வீடு புகுந்து தாக்குதல்! மூன்று பேர் கைது!


யாழ் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தியவர்களை விரைந்து செயற்பட்ட கோப்பாய் பொலிசார் மூவரை கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம்  இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது...

 மோட்டார் சைக்கிளில் வந்த குழு ஒன்று கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொனறில் மீது அத்துமீறி நுழைந்து தாக்குதலை நடத்தியது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து  விரைந்து செயற்பட்ட கோப்பாய் பொலிஸர் சந்தேகநபர்களை கைது செய்தனர்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ் வண்ணார்பண்ணை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் காதல் விவகாரம் காரணமாக இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ள நிலையில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post