யாழ் போதனா வைத்தியர்கள் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு! நோயாளர்கள் அவதி - Yarl Voice யாழ் போதனா வைத்தியர்கள் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு! நோயாளர்கள் அவதி - Yarl Voice

யாழ் போதனா வைத்தியர்கள் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு! நோயாளர்கள் அவதியாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தாதியர்கள் மற்றும் வைத்தியர்கள் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது 3000 ரூபாவாக உள்ள விசேட கடமைக் கொடுப்பனவை 10000 ரூபாவாக உயர்த்துதல், ஆசிரியர் சேவை சம்பள உயர்வின் மூலம் தாதிய சேவைக்கு ஏற்பட்டுள்ள சம்பள முரண்பாட்டைத் தீர்த்தல், தொழில் வல்லுனர் பட்டதாரிகளுக்கு திருத்தியமைத்த சம்பள அளவுத்திட்டத்தை நிர்ணயத்துடன் தகுந்த பதவி வாய்ப்புக்களைக் கிடைக்கச் செய்தல்,  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக யாழ்,போதனா வைத்தியசாலையின்  வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் சேவை,  என்பனவற்றின் சேவைகளை பெற்றுக்கொள்வதில் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நாடளாவிய ரீதியில்  முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post