எண்ணெய் தீர்ந்தது; கெரவலப்பிட்டி அனல் மின் நிலையம் இடைநிறுத்தம்; வரும் வாரத்தில் 10 மணி நேர மின்வெட்டு - Yarl Voice எண்ணெய் தீர்ந்தது; கெரவலப்பிட்டி அனல் மின் நிலையம் இடைநிறுத்தம்; வரும் வாரத்தில் 10 மணி நேர மின்வெட்டு - Yarl Voice

எண்ணெய் தீர்ந்தது; கெரவலப்பிட்டி அனல் மின் நிலையம் இடைநிறுத்தம்; வரும் வாரத்தில் 10 மணி நேர மின்வெட்டு



எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கெரவலப்பிட்டி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலைமையால் மின்வெட்டு நீடிக்கப்படலாம் என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், மின் உற்பத்திக்கான எரிபொருளை வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நீர் மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வீழ்ச்சியடைந்து வருவதால் அடுத்த வாரம் 10 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தற்போதைய காலநிலை மோசமடைந்தால், எதிர்வரும் புத்தாண்டுக் காலப்பகுதியில் நாளாந்த மின்வெட்டை மேலும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என மின் பொறியியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

தேசிய மின் கட்டமைப்புக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் நீர் மின் நிலையங்களுடன் தொடர்புடைய பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளமையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

நிலைமை மேலும் மோசமடைந்தால், நாளாந்த மின்சார விநியோகமும் கடுமையாக பாதிக்கப்படும் என அவர்கள் சுட்டிக்காட்டு கின்றனர்.

தற்போதைய நெருக்கடிக்கு முகங்கொடுத்து, பிரதான அனல் மின் நிலையங்களும் அவ்வப்போது செயலிழந்து வருவதால், நாளாந்த மின்வெட்டு அதிகரித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

நீர் மின் நிலையங்களின் மின் உற்பத்தி குறைவாக உள்ள போதிலும், அனல் மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தைப் பெறுவதற்கு உரிய நேரத்தில் எரிபொருள் அல்லது நிலக்கரியை வழங்குமாறு, மின்சார சபை ஏற்கனவே அதிகாரிகளுக்கு அறிவித்தி ருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post