2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஓகஸ்ட் மாதம் நடத்தத் தீர்மானம் -தினேஷ் குணவர்தன - Yarl Voice 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஓகஸ்ட் மாதம் நடத்தத் தீர்மானம் -தினேஷ் குணவர்தன - Yarl Voice

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஓகஸ்ட் மாதம் நடத்தத் தீர்மானம் -தினேஷ் குணவர்தன2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஓகஸ்ட் மாதம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சரான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக் கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும்.

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் 2021 உயர்தரப் பரீட்சைக்காக அதிபர்கள், கண்காணிப் பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை அவர் பாராட்டினார்.

எந்தப் பிரச்சினையும் இல்லாமல் திட்டமிட்டபடி பரீட்சை நடத்தப்பட்டதாகவும், பல்கலைக்கழக அனுமதியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக் கழகத்தில் இந்த வருடம் மருத்துவ பீடமொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post