யாழ் ஈச்சமோட்டைப் பகுதியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது வீதியின் அருகே குழாய் நீர் பொருத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊழியர்கள் கிடங்கு தோண்டிய போது சந்தேகத்துக்கிடமான பொருள் இருப்பதை அவதானித்தனர்.
உடனடியாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த இடத்தை பார்வையிட்ட பொலிசார் கைக்கொண்டு என்பதை உறுதி செய்ததுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை வரவழைத்து குறித்த குண்டை மீட்டனர்.20
--
Post a Comment