தமிழ்கட்சிகள் அரசாங்கத்திற்கு முண்டுகொடுக்ககூடாது- சிவாஜிலிங்கம் - Yarl Voice தமிழ்கட்சிகள் அரசாங்கத்திற்கு முண்டுகொடுக்ககூடாது- சிவாஜிலிங்கம் - Yarl Voice

தமிழ்கட்சிகள் அரசாங்கத்திற்கு முண்டுகொடுக்ககூடாது- சிவாஜிலிங்கம்தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றால், தமிழ் கட்சிகள் அரசியல் தலைவர்கள் அரசுக்கு முண்டு கொடுக்க வேண்டாம், அழுத்தம் கொடுங்கள் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கெ. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்;

ஜனாதிபதியாக பதவி ஏற்ற கோட்டபாய 2 ஆண்டுகள் 4 மாதங்கள் முடிவடைந்த பின்னே தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

புதிய நிபுணர் குழு அறிக்கை வெளிவந்திருப்பதாகவும், மொழிபெயர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகின்ற போதிலும் அது பற்றிய கலந்துரையாடல் நடத்தாமல் இடைக்கால பிரச்சினைகளை தீர்ப்பதாகவும் கோட்டபாய தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலையை மறுத்து, பயங்கரவாத தடைச் சட்டங்களை மீளப்பெறும் படி வலியுத்தியும் இன்று வரை ஒன்றும் நடைபெறவில்லை. நீதிமன்றத்தால் எந்தவொரு தண்டனைகளும் விதிக்கப்படாதவர்களுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்க முடியும். ஆனால் தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் ஒன்றும் நடைபெறவில்லை.

சிங்களத் தலைவர்களின் நாடகம் ஆடுகிறார்கள். என்ன தெரிவிப்பதாக இருந்தாலும் சர்வதேச மத்தியஸ்தகர் முன்னிலையில் பேசுங்கள். எந்தந்த இடங்களில் தீர்மானங்களை எடுத்தார்களோ அதற்கேற்ப வர்த்தமாணி அறிக்கையினை வெளியிட வேண்டும்.

இலங்கையின் அரசியல் அமைப்பில் உள்ள 20 சாசனங்களுக்கும், இலங்கை அரசாங்கம் தீர்வினை பெற்றுத்தராது. ஆகவே சர்வதேச அழுத்தத்தினால் தான் இதற்கு முடிவினை பெற்றுக்கொள்ளலாம்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் உட்பட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு, தமிழ் கட்சிகள் அரசுக்கு முண்டு கொடுக்க வேண்டாம், அழுத்தம் கொடுங்கள்.- என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post