யாழ் வந்த பிரதமர் மகிந்தவிற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னணி போராட்டம்! - Yarl Voice யாழ் வந்த பிரதமர் மகிந்தவிற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னணி போராட்டம்! - Yarl Voice

யாழ் வந்த பிரதமர் மகிந்தவிற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னணி போராட்டம்!பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யாழ்ப்பாணத்திற்கான வருகையை எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டம் ஒன்றை இன்றைய தினம் மேற்கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக காலை ஒன்றுகூடிய போராட்டகாரர்கள் மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு, அரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிய சர்வதேச விசாரணை வேண்டும், 
இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும், கந்தரோடையில் புத்தர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டாதே, நாவற்குழி சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்து போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர்  சட்டத்தரணி க.சுகாஸ் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலிசாரும் புலனாய்வாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post