உக்ரைனில் இடம்பெறும் போரினால் புட்டின் அழிக்கப்படுவார்- அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் - Yarl Voice உக்ரைனில் இடம்பெறும் போரினால் புட்டின் அழிக்கப்படுவார்- அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் - Yarl Voice

உக்ரைனில் இடம்பெறும் போரினால் புட்டின் அழிக்கப்படுவார்- அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சித்தப்பிரமை பிடித்தவர் முற்றிலும் ஈவிரக்கமற்ற சர்வாதிகாரி என வர்ணித்துள்ள அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் டட்டன் உக்ரைனில் இடம்பெறும் போரினால் புட்டின் அழிக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான மூலோபாய இணைப்பு குறித்த தனது எச்சரிக்கையை மேலும் தீவிரப்படுத்தியுள்ள பீட்டர் டட்டன் இருநாடுகளிடையேயான சமீபத்தைய ஒப்பந்தத்தை அசுத்தமான கூட்டணி என வர்ணித்துள்ளார்.
சீனா உக்ரைன் நெருக்கடியை பிராந்தியத்தில் உள்ள நாடுகளை வற்புறுத்துவதற்கான வாய்ப்பாக பயன்படுத்தக்கூடும் எனவும் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.
புட்டின் தனது முழுமையான கட்டுப்பாட்டில் இருக்ககூடிய ரஷ்ய ஏகாதிபத்திய சாம்ராஜ்யத்தை மீண்டும் ஏற்படுத்த விரும்புகின்றார்,புட்டினின் முற்றிலும் சிதைவடைந்த இழிந்த உலக கண்ணோட்டத்தில் ஒரு வெற்றிகரமான ஜனநாயக ஐரோப்பா சார்ந்த உக்ரைனிற்கு இடமில்லை என பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post