நான் ஏன் தமிழன்? ஏனெனில் என் ரத்தம் தமிழக மண்ணுடன் கலந்திருக்கிறது”- ராகுல் காந்தி பேச்சு - Yarl Voice நான் ஏன் தமிழன்? ஏனெனில் என் ரத்தம் தமிழக மண்ணுடன் கலந்திருக்கிறது”- ராகுல் காந்தி பேச்சு - Yarl Voice

நான் ஏன் தமிழன்? ஏனெனில் என் ரத்தம் தமிழக மண்ணுடன் கலந்திருக்கிறது”- ராகுல் காந்தி பேச்சுதான் தமிழன் என்று ஏன் சொன்னேன் என்பது குறித்து ராகுல்காந்தி உருக்கமாக உரையாற்றியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில், உள்ள வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதை நூலான, ‘உங்களில் ஒருவன்’ புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் ராகுல்காந்தி, தேஜஸ்வி யாதவ், உமர் அப்துல்லா, பினராயி விஜயன் ஆகிய தேசிய அளவிலான தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதில் ராகுல்காந்தி பேசுகையில், ”ஒரு அருமையான புத்தகத்தை ஸ்டாலின் வழங்கியுள்ளார். அவருடைய வாழ்க்கை நீண்ட நெடிய போராட்டம். இது பல ஆண்டுகால போராட்டம். தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் நிறையவே செய்திருக்கிறார். நேற்று என் தாய் என்னை தொடர்புகொண்டு பேசினார். ஸ்டாலினுக்கு பிறந்த நாள் என்று கூறினார். நான் எனக்கு தெரியும் என்று கூறிவிட்டு, அவருக்கு எத்தனை வயது தெரியுமா என கேட்டேன். தெரியாது என்றார். 69 வயது என்று கூறியதும் அவர் வாய்ப்பேயில்லை என்றார். சரி, அவருக்கு எத்தனை வயது இருக்கும் என கேட்டேன். அதற்கு அவர்,58, 60 இருக்கும் என்றார்.
கூகுள் தேடிப்பார்த்தார். மை காட் நீ சொன்னது சரிதான் என்று ஒப்புக்கொண்டார். அவர் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறார் என்பதை ஒரு புத்தகமாக எழுத வேண்டும். என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து பெருமைபடுத்தியதற்கு நன்றி கூறுகிறேன். தமிழ்நாட்டிற்கு வருவதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். என் மனதின் ஆழத்திலிருந்து கூறுகிறேன். சில நாட்களுக்கு முன்பு நான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தமிழகத்தை பாராட்டினேன்.
நான் ஏன் தமிழ் என்று கூறினேன்?:

நாடாளுமன்றத்திலிருந்து வெளியே வந்தபோது, ‘நீங்கள் ஏன் தமிழ்நாட்டை மேற்கொள் காட்டினீர்கள்?” என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார். அப்போதுதான் எனக்கு தோன்றியது, நான் தமிழ்நாட்டை குறிப்பிட்டிருக்கிறேன் என்பது. எனக்கே தெரியாமல் என் வாயிலிருந்து தமிழ்நாடு என்று கூறியிருக்கிறேன். நான் தமிழ் என்று கூறினேன். காரிலிருந்து ஏறியதற்கு பின்பு தான் நான் ஏன் அப்படி கூறினேன் என்று நினைத்து பார்த்தேன். 3500 ஆண்டுகள் பழமையான நாகரீகம் கொண்ட மொழி தமிழ். அந்த நாகரீகம் குறித்து முழுமையாக தெரிந்துகொள்ளவில்லை.
பிறகு எப்படி தமிழன் என்று கூறிக்கொண்டேன் என்பது குறித்து நான் யோசித்துக்கொண்டிருந்தேன். காரணம், என் ரத்தம் உங்கள் மண்ணுடன் கலந்திருக்கிறது. தந்தையை இழப்பது என்பது வேதனையானது. மிகவும் கடினமான அனுபவம் அது. அந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டேன். தமிழனாக இருப்பதன் பொருள் என்ன?. நான் தமிழ்நாட்டிற்கு வந்தபோது மனிதநேயத்துடன் வந்தேன். உங்கள் மொழி, வரலாறு, பராம்பரியத்திற்கு தலைவணங்குபவனாக வந்தேன்.
பிரதமர் மோடிக்கு புரிதல் இல்லை:
தமிழ்நாடு மக்கள் குறித்து பிரதமருக்கு புரிதல் இல்லை. தமிழ்நாடு என்பது 3500 ஆண்டுகள் பழமையானது. தமிழ்நாடு என்பது மொழி. தமிழ்நாட்டை அவர் புரிந்துகொள்ளவில்லை. தமிழ்நாடு மக்களின் குரலை புரிந்துகொள்ள முடியாமல், உங்களுக்காக பேசுகிறேன் என எப்படி அவர் கூறமுடியும். நீட், ஜிஎஸ்டி வேண்டாம் என கூறிய தமிழ்நாடு மக்களின் குரலை செவிசாய்க்காமல் அவர்களை அவமதிக்கிறீர்கள். 3000ம் ஆண்டுகலாக தமிழ்நாட்டின் மீது யாராலும், எதையும் திணிக்க முடிந்ததில்லை. அன்போடும், அக்கறையோடும் பேசினால் தமிழ்நாடு மக்களிடமிருந்து எதையும் பெற முடியும்.
இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் தற்போது தான் முதன்முறையாக ஒரு மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஜம்மு காஷ்மீர் மக்களால் தங்களை தாங்களே ஆள முடியாத நிலை உள்ளது. குஜராத், உத்தரபிரதேச அதிகாரிகள் ஜம்மு காஷ்மீரை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். இது அந்த மக்களுக்கு இழைத்திருக்கும் கொடுமை. பஞ்சாப்பில் நூற்றுக்கணக்கான நிலங்களை எடுத்து எல்லை பாதுகாப்பு படையினருக்கு கொடுத்திருக்கிறார்கள். அதேயேத்தான் தமிழ்நாட்டிற்கும் அவர்கள் செய்கிறார்கள்.

‘நாங்கள் போராடி வெல்வோம்’
வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியா. நாங்கள் எதை சொல்கிறோமா அதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். ஆனால், நீங்கள் யார் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிப்பதற்கு.. உங்களுக்கு யார் அந்த அதிகாரத்தை கொடுத்தது. இது தான் நாட்டின் முக்கிய பிரச்னை.

பாஜக கற்பனை கோட்டை கட்டவேண்டாம். அவர்களுக்கு எதிராக நாங்கள் போராடி வெல்வோம். அவர்கள் வரலாற்றுக்கு எதிராகவும், பாரம்பரியத்தை எதிர்த்து போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள். தோற்றுவிடுவார்கள். சகோதரர் ஸ்டாலினுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்” என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post