ரோஹித – ஜோன்ஸ்டன் இடையே முரண்பாடு? - Yarl Voice ரோஹித – ஜோன்ஸ்டன் இடையே முரண்பாடு? - Yarl Voice

ரோஹித – ஜோன்ஸ்டன் இடையே முரண்பாடு?

குருநாகல் மாவட்டத்துக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பு அலுவலகத்தை திறப்பது மீண்டும் ஒரு தடவை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகிந்த ராஜபக்ச 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டதுடன், தன்னை அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டிய குருநாகல் மக்களுக்கு நேரடியாக சேவையாற்றுவதற்காக இந்த அலுவலகத்தை அமைத்துள்ளார்.

இது பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ தலைமையில் திறக்கப்படவுள்ளது.

ரோஹித ராஜபக்ச கடந்த பொதுத் தேர்தலின் போது மகிந்த ராஜபக்ச சார்பில் குருநாகல் மாவட்டத்தில் பெருந்தொகையான பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொண்டார். அதன் பின்னரும் அவர் குருநாகல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால் ரோஹித ராஜபக்ச அரசியலுக்கு வரப்போவதாக தகவல் பரவிமது.

இதுவரை அறிவிக்கப்படாவிட்டாலும், இந்த நிலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட தலைவர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்காலத்தில் அவருக்கு அரசியல் அச்சுறுத்தல் வரலாம் என்ற காரணத்தினால் தற்போது ரோஹிதவின் செயற்பாடுகளை முறியடிக்க அவர் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இதன்படி, நேற்று (27) நடைபெறவிருந்த பிரதமர் அலுவலகத்தை திறக்கும் நிகழ்வை ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பல தடவைகள் ஒத்திவைத்திருந்த போதிலும், மீண்டும் அதனை மார்ச் 05 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘இதயத்தலைவன்’ என அழைக்கப்படும் மஹிந்த ராஜபக்ஷவின் மகனைக்கூட குருநாகல் மாவட்டத்தில் அரசியலில் ஈடுபட அமைச்சர் ஜோன்ஸ்டன் அனுமதிக்காவிட்டால், கட்சிக்குள் இருக்கும் ஏனையோர் கேள்வியெழுப்புவார்கள் என அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post