அமெரிக்காவின் கவனம் உக்ரைன் குறித்து காணப்படும் நிலையில் மத்திய கிழக்கில் சீனா தனது செல்வாக்கை அதிகரிக்க முயலக்கூடும்- ஆய்வாளர்கள் - Yarl Voice அமெரிக்காவின் கவனம் உக்ரைன் குறித்து காணப்படும் நிலையில் மத்திய கிழக்கில் சீனா தனது செல்வாக்கை அதிகரிக்க முயலக்கூடும்- ஆய்வாளர்கள் - Yarl Voice

அமெரிக்காவின் கவனம் உக்ரைன் குறித்து காணப்படும் நிலையில் மத்திய கிழக்கில் சீனா தனது செல்வாக்கை அதிகரிக்க முயலக்கூடும்- ஆய்வாளர்கள்அமெரிக்காவின் கவனம் உக்ரைன் ரஷ்ய மோதலின் பக்கம் திரும்பியுள்ளதை பயன்படுத்தி சீனா தனது புதிய பட்டுப்பாதை தி;ட்டத்தின் மூலம் மத்தியகிழக்கில் தனது செல்வாக்கை அதிகரிக்க முயலக்கூடும் என ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனா வளைகுடா ஒத்துழைப்பு பேரவையில் இடம்பெற்றுள்ள சவுதிஅரேபியா குவைத் ஓமான் பஹ்ரைன் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளை ஜனவரியில் சந்தித்துள்ளமை சீனாவிற்கும் வளைகுடா நாடுகளிற்கும் இடையில் மூலோபாய பொருளாதார ஒத்துழைப்புஅதிகரிப்பதை வெளிப்படுத்தியுள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
குறிப்பாக சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங்யி பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் ஈரானின் அணுவிவகாரம் போன்ற பிராந்திய விவகாரங்கள் குறித்து வளைகுடா ஒத்துழைப்பு பேரவையில் இடம்பெற்றுள்ள நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

மேலும் யுத்தத்திற்கு பிந்தைய புனர்நிர்மாணத்திற்கான நடவடிக்கைகளிற்கான உதவிகளை பெற முயலும் சிரியா ஜனவரியில் புதியபட்டுப்பாதை திட்டம் குறித்து உடன்படிக்கையொன்றி;ல் கைச்சாத்திட்டுள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்பி;ற்காக ரஷ்யாவிற்கு எதிரானதடைகளை விதிக்கவேண்டும் என தனது நேசநாடுகளை அமெரிக்கா கேட்டுவருகின்ற நிலையில் மத்திய கிழக்கில் தனது செல்வாக்கை அதிகரிக்க நினைக்கும் சீனாவின் எண்ணம் நிறைவேறலாம்,அந்த நாடு தற்போதைய சூழ்நிலையை மத்தியகிழக்கில் தனது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பயன்படுத்தலாம் என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சீனா தனது சர்வதேச இராணுவ பிரசன்னத்தை ஆயுதவி;ற்பனை மற்றும் கால்பதிக்ககூடிய இடங்கள் அடிப்படையில் விரிவாக்கம் செய்வதற்கு மத்திய கிழக்கு பொருத்தமான இடம்என சர்வதேச நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்தியகிழக்கில் குழப்பகரமான அரசியல் சூழ்நிலை அந்த பகுதியில் சீனாவின் நகர்வின் வேகத்தை பாதித்துள்ளது என தெரிவிக்கும் ஆய்வாளர்கள் உக்ரைன் நெருக்கடியால் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சீனா தனது தனது வேகத்தை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கின்றனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்துடன் தனது நெருக்கத்தை சீனா அதிகரித்து வருவது மத்தியகிழக்கிற்கான வர்த்தக தளம் என்ற தனதுநிலையை உறுதிசெய்துகொள்வது குறித்து சீனா ஆர்வமாக உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.
சீனா ஐக்கிய அரபு இராச்சியத்தின் மூலோபாய புவிசார் நிலையை பயன்படுத்த விரும்புகின்றது என தெரிவித்துள்ள ஹொங்கொங்போஸ்ட் புதிய பட்டுப்பாதை திட்டத்தின் கீழ் மத்திய கிழக்கிற்கான வர்த்தக தளம் ஆபிரிக்காவிற்கான நுழைவாயில் என்ற சீனாவின் பாரிய பொருளாதார தந்திரோபாயத்திற்கான அவசியமான இணைப்பை ஐக்கிய அரபு இராச்சியம் விளங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post