கணவனின் கத்திக்குத்துக்கு மனைவி பலி - Yarl Voice கணவனின் கத்திக்குத்துக்கு மனைவி பலி - Yarl Voice

கணவனின் கத்திக்குத்துக்கு மனைவி பலிமட்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பிரதேசத்தில் கணவனின்கத்திக்குத்து காரணமாக  ய மனைவி உயிரிழந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (30) இடம்பெற்றுள்ளதாகவும்கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்   கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

தன்னாமுனை சவுகடி கடற்கரை வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயாரான  சி. சிவறஞ்சினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த கணவன் மனைவிக்கிடையே  ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கணவர் மனைவியைவிட்டு பிரிந்து சென்று அவரது தாயார் வீட்டில் தங்கி வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் மனைவி வேலைவாய்ப்பை பெற்று வெளிநாடு சென்று கடந்த 2 மாத்திற்கு மன்னர் நாடுதிரும்பிய நிலையில் தென்னம்  தோட்டம் ஒன்றில்ஒன்றில் வேலைக்கு சென்று வருகின்றார் 

இந்த நிலையில் தன்னைப்பற்றி கணவர் மோசமாக கதைத்து வருவதாகவும் அதனை விசாரிப்பதற்காக சம்பவதினமான நேற்று மாலை 6 மணிக்கு கணவர் தங்கியிருக்கும் அவரின் தாயார் வீட்டிற்கு சென்ற நிலையில் கணவன் மனைவிக்கும் இடையே வாய்தர்கம் ஏற்பட்டதையடுத்து கணவர் கத்தியால் மனைவிமீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதையடுத்து அவர் படுகாயமடைந்த ; நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் இடையில் உயிரிழந்துள்ளநிலையில் சடலம் பிரோத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளது என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது 

இதனையடுத்து கத்திகுத்து தாக்குதலை நடாத்தியவவர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் இன்று அதிகாலை பொலிசாரிடம் சரணடைந்ததையடுத்து அவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post