“ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிக்கின்றோம்!”! தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவிப்பு - Yarl Voice “ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிக்கின்றோம்!”! தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவிப்பு - Yarl Voice

“ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிக்கின்றோம்!”! தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவிப்புதமிழர் தாயகத்தில் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பைத் திட்டமிட்டுத் தீவிரமாகத் தொடர்ந்து கொண்டும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கும் சிந்தனை அறவேயின்றியும் நாட்டைப் பொருளாதார ரீதியாக அதலபாதாளத்திற்குக் கொண்டு சென்றும் மக்களையும் சர்வதேசத்தையும் எதிர்கொள்ள முடியாது சிக்கித் திணறும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள், தான் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைத் திசைதிருப்புவதற்காகவும் அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் நாளைய தினம் (23.03.2022) நடாத்தும் அரசியல் நாடகமான சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு ஜனாதிபதியைக் காப்பாற்றவோ அவருக்கு உயிர் கொடுக்கவோ விரும்பாத காரணத்தால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்துச் சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணிப்பது என்ற முடிவை இனம் சார்ந்து எடுத்துள்ளது.

க.சுகாஷ்,
ஊடகப் பேச்சாளர்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

0/Post a Comment/Comments

Previous Post Next Post