யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் புதிதாக எவரும் நியமிக்கப்படவில்லை! அங்கஜன் எம்பி - Yarl Voice யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் புதிதாக எவரும் நியமிக்கப்படவில்லை! அங்கஜன் எம்பி - Yarl Voice

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் புதிதாக எவரும் நியமிக்கப்படவில்லை! அங்கஜன் எம்பியாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் புதிதாக எவரும் நியமிக்கப்படவில்லை என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்திக்குறிப்பில், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான பிரதமர் அலுவலக பிரதிநிதியொருவரின் பெயர் பரிந்துரை மாத்திரமே இடம்பெற்றுள்ளது என்பதையும், அதுதொடர்பான கடிதம் எமக்கு கிடைத்துள்ளது என்பதையும் தெளிவுபடுத்துகின்றோம்.

எனவே யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில், புதிய நியமனமொன்று இடம்பெற்றுள்ளதாக வெளியாகிய அனைத்து செய்திகளும் பொய்யானவை

அத்தோடு, “யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருக்கு எதிரான முறைப்பாடுகள் பிரதமர் அலுவலகத்துக்கு கிடைத்துள்ளன” என்ற செய்தி அறிக்கையிடல்களும் போலியானவை என்பதோடு, ஒரு சில சுயலாப ஊடகவியலாளர்களால் திட்டமிட்டு பரப்பப்படும் போலிச்செய்திகளே அவை. இந்த போலிச் செய்திகளை ஏனைய ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் பிரசுரிப்பதானது அவர்களின் ஊடக அறத்துக்கு விரோதமான செயலாகும் என்றுள்ளது.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீத்நாத் காசிலிங்கம் பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post