தமிழர் பகுதிகளில் தொடர்ந்தும் நிலஅபகரிப்பு முயற்சிகள் - ஜனாதிபதி கூட்டமைப்பிற்கு வழங்கிய உறுதிமொழி பொய்யா? என மக்கள் கேள்வி? - Yarl Voice தமிழர் பகுதிகளில் தொடர்ந்தும் நிலஅபகரிப்பு முயற்சிகள் - ஜனாதிபதி கூட்டமைப்பிற்கு வழங்கிய உறுதிமொழி பொய்யா? என மக்கள் கேள்வி? - Yarl Voice

தமிழர் பகுதிகளில் தொடர்ந்தும் நிலஅபகரிப்பு முயற்சிகள் - ஜனாதிபதி கூட்டமைப்பிற்கு வழங்கிய உறுதிமொழி பொய்யா? என மக்கள் கேள்வி?



யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன்பகுதியில்வனஜீவராசிகள் திணைக்களத்தினர் காணிகளை அபகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அம்பன் கிராம சேவகரால் அம்பன் மக்களை காலை 9.30 மணிக்கு  தங்களது காணிகளுக்கான உறுதிகளுடன்  சமூகமளிக்குமாறு  மக்களுக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது.
எனது எல்லை பரப்பிற்குள் வருகின்ற மக்களின் காணிகளை வனஜீவராசிகள் திணைக்களம் பார்வையிட்டு மக்களின்காணிகளை தவிர்த்து தமது எல்லையினை வகுப்பதற்காக இன்று வருகை தரவுள்ளது என என கிராமசேவகர் அறிவித்துள்ளார்.
எனவே வைத்தியசாலை முன்பக்கம் தொடக்கம்  தங்கராசா  என்பவரது வீடு வரை  உள்ள  வயல் காணி உரிமையாளர்கள் காலை  8.30 மணிக்கு ஆவணங்களுடன்  தயார் நிலையில் வருமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அவர் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில்  இடம்பெற்ற சந்திப்பின்போது காணி அபகரிப்பில் ஈடுபடமாட்டோம் என உறுதிமொழி வழங்கப்பட்டதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்திருந்த நிலையி;ல் இன்று  இவ் நில அபகரிப்பு  இடம்பெறுவது மக்;கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளைதிருகோணமலை மூதூர் பிரதேசசெயலகபிரிவுக்குட்பட்ட  கிளிவெட்டி முத்துமாரியம்;;பாள் ஆலயத்திற்கு சொந்தமான காணியை தொல்பொருள் திணைக்களம் அளவை செய்யசென்றதால் நேற்று திங்கட்கிழமை அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
இந்த கோயிலுக்கு சொந்தமான 20பேர்ச் காணியை தொல்பொருள் திணைக்களமும்  நில அளவை திணைக்களமும் இணைந்து அளவீடு செய்யசென்றதால் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.
இதன்போது தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பிரதிசெயலாளர்  கலாநிதி  ஸ்ரீஞானேஸ்வரன்  அங்கு சென்று மக்களுடன் இணைந்து இதனை தடுத்து நிறுத்தினார்.
இந்தப்போராட்டத்தை தொடர்ந்து தொல்பொருள் திணைக்களத்தினர் அவ்விடத்திலிருந்து சென்றனர்.

கால்நடைகளுக்கான மேச்சல் தரையை வனவளத்திணைக்களத்தினர் வேலி போட்டு அடைப்பதாக தெரிவித்து வவுனியா மதுராநகர் மற்றும் இத்திக்குளம் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியா மதுராநகர் கிராமத்தின் பின்புறமாக உள்ள வனவளத்திணைக்களத்தினருக்கு உரிய காணியில் குறித்த பகுதியை சேர்ந்த 6 கிராமங்களை சேர்ந்த மக்களின் கால்நடைகள் மேச்சலுக்காக சென்று வரும் நிலையில் கடந்த சில நாட்களாக வனவளத்திணைக்களத்தினர் குறித்த பகுதிக்குள் கால்நடைகள் வருவதை தடை செய்யும் வகையில் வேலி அமைத்து கால்நடை வளர்ப்பாளர்களையும் அச்சுறுத்தி வந்துள்ளனர்.

இதன் காரணமாக தமது கால்நடைகளுக்கு உணவு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த பகுதிக்குள் காணப்படும் குளத்தின் நீரேந்து பிரதேசத்திலேயே கால்நடைகள் நீரை பருகுவதால் தற்போது அதுவும் தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த கிராம மக்கள் தமது கால்நடைகளை மேய்ப்பதற்கான இடத்தினை வேலி போட்டு அடைப்பதனை வனவளத்திணைக்களத்தினர் நிறுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்திக்குளம் காட்டு அம்மன் ஆலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுமார் 6 கிராமங்களை சேர்ந்த 2000 கால்நடைகளின் மேச்சல் தரை இல்லாமல் போவதாகவும் தாம் கால்நடை வளர்ப்பை கைவிட்டு கிராமத்தினை விட்டு இடம்பெயர வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த நிலையில் ஊர்வலமாக சுமார் 3 கிலோ மீற்றர் சென்று மதுராநகர் கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்த வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான கு. திலீபனிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது பிரச்சனைகளை தெரிவித்தததை அடுத்து குறித்த பகுதிக்கு வனவளத்திணைக்களத்தினரை வருமாறு பாராளுமன்ற உறுப்பினர் பணித்திருந்தார்.

இதனையடுத்து அங்கு வந்த வனவளத்திணைக்களத்தினரிடம் குறித்த வேலி அமைக்கும் பணியை தற்காலிகமாக கைவிடுமாறும் மக்கள் கால்நடைகளை மேய்ப்பதற்கு தடை ஏற்படுத்த வேண்டாம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

எனினும் வனவளத்திணைக்களத்தினர் குறித்த பகுதியில் வனம் உருவாக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்திருந்தனர்.

எனினும் எதிர்வரும் புதன்கிழமை அரசாங்க அதிபர் தலைமையில் வனவளத்திணைக்களத்தினர் கிராம மக்கள் சந்தித்து குறித்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனவும் அதுவரை வனவளத்திணைக்களத்தினர் பொதுமக்கள் கால்நடைகளை குறித்த பகுதிக்குள் மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல அனுமதிக்குமாறு தெரிவித்திருந்தார்.

இதற்கு சம்மதம் தெரிவித்த வனவளத்திணைக்களத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களும் குறித்த பகுதியில் இருந்து கலைந்து சென்றிருந்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post