பும்ரா ஆர்சிபியில் தான் இருந்திருப்பார்.. கோலியின் ஆணவப்பேச்சால் எல்லாம் தலைகீழானது..பார்தீவ் பளீச் - Yarl Voice பும்ரா ஆர்சிபியில் தான் இருந்திருப்பார்.. கோலியின் ஆணவப்பேச்சால் எல்லாம் தலைகீழானது..பார்தீவ் பளீச் - Yarl Voice

பும்ரா ஆர்சிபியில் தான் இருந்திருப்பார்.. கோலியின் ஆணவப்பேச்சால் எல்லாம் தலைகீழானது..பார்தீவ் பளீச்




மும்பை: ஜஸ்பிரித் பும்ராவை ஆர்சிபிக்கு எடுக்க முயன்ற போது விராட் கோலி ஏளனமாக பேசி மறுத்துள்ளது தெரியவந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் மோசமான தோல்வியை ஆர்சிபி சந்தித்தது.
ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்து 206 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதும், பஞ்சாப் கிங்ஸ் அணி அசால்டாக 19 ஓவர்களில் வெற்றி பெற்றது.
I

ஆர்சிபியின் பரிதாபம்
எத்தனை கேப்டன்கள் மாறினாலும், எத்தனை வீரர்களை புதிதாக மாற்றினாலும் ஆர்சிபியின் 2வது இன்னிங்ஸ் பிரச்சினை தீரவே இல்லை. அனைத்து அணிகளும் 150 ரன்களை கூட டிஃபண்ட் செய்யும் போது, ஆர்சிபி மட்டும், ஒவ்வொரு முறை 200 ரன்களுக்கு மேல் ரன்களை குவித்தும், அதன் பவுலர்கள் ரன்களை தாராள பிரபு போன்று வாரி வழங்குகின்றனர். இதற்கு காரணம் முன்னணி பவுலர் ஒருவர் கூட அதில் இல்லாதது தான்.
ஆர்சிபியில் ஜஸ்பிரித் பும்ரா
இந்நிலையில் ஆர்சிபி அணியில் ஜஸ்பிரித் பும்ரா வாங்கப்பட்டிருப்பார் என்றும் கோலி தான் மறுத்துவிட்டார் என்றும் பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நான் 2014ம் ஆண்டு ஆர்சிபியில் விளையாடிய போது, கோலியிடம் பேசினேன். பும்ரா என்ற ஒரு பவுலர் சிறப்பாக செயல்படுகிறார், அவரை எடுக்கலாமா என்று கேட்டேன்.

கோலி ஏளன பதில்
அதற்கு பதிலளித்த அப்போதைய கேப்டன் விராட் கோலி, என்ன பும்ரா, வும்ரா என ஓவராக புகழ்கிறீர்கள். அவன் அப்படி என்ன செய்துவிடப்போகிறான்" என ஏளனமாக கூறி மறுத்துவிட்டார். அதன் பின்னர் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியில் அற்புதமான ஆட்டக்காரராக உருவெடுத்தார். இன்று உலகின் தலைசிறந்த பவுலராக விளங்கி வருகிறார் என பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார்.
ரசிகர்கள் கொந்தளிப்பு
ஆர்சிபி அணியில் மட்டும் பும்ரா இருந்திருந்தால், நிச்சயம் இதுபோன்ற அதிக ஸ்கோர்களை டிஃபன்ஸ் செய்திருப்பார். இதனால் விராட் கோலிக்கு எதிராக ரசிகர்கள் இணையத்தில் விமர்சனங்களை வீசி வருகின்றனர். மிட்செல் ஸ்டார்க் போன்ற வீரரையும் சரியாக கோலி வைத்துக்கொள்ளவில்லை என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post