தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வும் சமூக சேவையாளர்கள் கௌரவிப்பும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு வை. எம் .சி மண்டபத்தில் தந்தை செல்வா நற்பணிமன்றம் தலைவர் கலையரட்ணம் தலைமையில் நடைபெற்றது .
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் நிறுவனரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா கலந்துகொண்டார்
இன் நிகழ்வில் மங்கள வாத்தியங்களுடன் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு மூக்கு கண்ணாடிகளும் சமுகத்திற்கு சேவையாற்றியவர்களும் கொளரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ் வில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா கஜதீபன் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அ .ஜெபநேசன் வலிகாமம் மேற்கு பிரதேச சபை உப தவிசாளர் மற்றும் வலி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
Post a Comment