இதயம் பலவீனமானவர்கள்... விஜய் ஆன்டனி போட்ட ட்வீட் எதுக்குன்னு தெரியுமா? - Yarl Voice இதயம் பலவீனமானவர்கள்... விஜய் ஆன்டனி போட்ட ட்வீட் எதுக்குன்னு தெரியுமா? - Yarl Voice

இதயம் பலவீனமானவர்கள்... விஜய் ஆன்டனி போட்ட ட்வீட் எதுக்குன்னு தெரியுமா?
 ரசிகர்களின் எதிர்பார்ப்பை, சர்பென்சை தொடர்ந்து அதிகரிக்க வைத்து வருகிறார் விஜய் ஆன்டனி. இதை தொடர்ந்து தக்க வைத்து வருவது, அப்படி என்னதாய்யா பண்ண போறீங்க...ஓவர் பில்டப்பா இருக்கே என அனைவரையும் கேட்க வைத்துள்ளது.
விஜய் ஆன்டனி தற்போது மழைபிடிக்காத மனிதன் உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து வருகிறார். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆன்டனி, பிறகு நடிகர், தயாரிப்பாளர் என அவதாரம் எடுத்தார். இவர் நடித்த பிச்சசைக்காரன் படம் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.

நான் தான் ANTI BIKILI
இந்நிலையில் சமீபத்தில் BIKILI யாரு ஒன்றை கிளப்பி விட்டு, சோஷியல் மீடியாவை பரபரப்பாக்கினார். பிறகு ANTI BIKILI யாரு என்றார்கள். இது பலரின் கவனத்தையும் ஈர்த்ததால் விஜய் பட டைட்டிலா, அஜித் பட டைட்டிலா என பலரும் கேட்டுக் கொண்டிருந்த சமயத்தில், தான் நடிக்கும் பிச்சைக்காரன் 2 படத்தில் நான் தான் ANTI BIKILI என்பதை வெளிப்படுத்தினார் விஜய் ஆன்டனி.

யாரு BIKILI
ஆனால் கடைசி வரை BIKILI யாரு என்பதை மட்டும் சொல்லவேயில்லை. இதனால் பிச்சைக்காரன் 2 படத்தில் விஜய் ஆன்டனி இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா, BIKILI நீங்க தானா. இல்ல விஜய்காந்த், விஜய் சேதுபதியாராவது நடிக்கிறார்களா என ரசிகர்கள் பல விதங்களில் கேட்டு வந்தனர். அதே சமயம் பிச்சைக்காரன் நல்ல படம், அதன் மரியாதையை கெடுத்து விடாதபடி எடுங்கள் என வேண்டுகோள் வைத்துள்ளனர்.

ANTI BIKILI தீம் சாங்
பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் விஜய் ஆன்டனி டைரக்டராகவும் அவதாரம் எடுக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் பிச்சைக்காரன் 2 பிறகு இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுறது. இந்த படத்திற்காக வித்தியாசமான ஒரு ஃபஸ்ட்லுக்கையும் வெளியிட்டனர். இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு ANTI BIKILI தீம் சாங் வெளியிடப்பட உள்ளதாக கடந்த இரண்டு நாட்களாக சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வந்தார் விஜய் ஆன்டனி.

இதயம் பலவீனமானவர்கள்...
இதைத் தொடர்ந்து இன்று மற்றொரு வித்தியாசமான ட்வீட்டை பதிவிட்டுள்ளார். அதில், யாரு BIKILI? இன்று மாலை 5 மணிக்கு ANTI BIKILI theme song ரிலீஸ் ஆகிறது. இதயம் பலவீனமானவர்கள், sound கம்மியா வெச்சு பாட்ட கேளுங்க ப்ளீஸ் என கேட்டுக் கொண்டதுடன் வித்தியாசமான மற்றொரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். விஜய் ஆன்டனியின் இந்த ட்வீட்டை, ஓவர் பில்அப்பா இருக்கே என சிலர் கலாய்த்தாலும், பலர் பாராட்டி உள்ளனர்.

என்ன இருக்குன்னு பார்த்துர்வோம்
வேற லெவல் தலைவா...எனக்கென்னவோ வழக்கம் போல் புரியாத வார்த்தைகளை போட்டு, அரசியல்டவாதிகளை, கொலை பன்னுறவன, கொள்ளை அடிக்கிறவனை வைச்சு செய்ய போறிங்களோன்னு தோனுது. பிச்சைக்காரன் க்ளைமாக்ஸ் பிஜிஎம் பீட் பண்ணுற மாதிரி பிச்சைக்காரன் 2 வருதான்னு பார்ப்போம். நீங்க ரிலீஸ் பண்ணுங்க என்ன இருக்குனு பார்த்துர்வோம். நாங்க சவுண்ட் அதிகமா வச்சு தாங்க பாட்டு கேட்போம். எல்லாம் ஓகே. மியூக் யாரு...ஆவலாக காத்திருக்கிறோம் என பலர் கமெண்ட் செய்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post