வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் கதவடைப்பு போராட்டம் - Yarl Voice வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் கதவடைப்பு போராட்டம் - Yarl Voice

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் கதவடைப்பு போராட்டம்
யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண கல்வி அமைச்சின் வாயிலில் வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களது நியமனம் தொடர்பாக அறிந்துகொள்வதற்காக நேற்றைய தினம் அமைச்சுக்கு வருகை தந்திருந்த போதிலும் அதற்கான பதில் கிடைக்காமல் இன்றைய தினம் அவர்கள் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று அதிகாலையில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டராசிரியர்கள் காலையில் அலுவலகத்திற்கு வருகை வந்த உத்தியோகத்தர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து பொலிசாரின் தலையீட்டினால் அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

வடக்கு மாணத்தைச் சேர்ந்த 186 தொண்டர் ஆசிரியர்கள் நியமனத்தை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post