அன்று ஆயுதத்தால் அழித்தாய்! இன்று பட்டினியால் அழிக்கின்றாய்! அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக யாழில் போராட்டம்!!!! - Yarl Voice அன்று ஆயுதத்தால் அழித்தாய்! இன்று பட்டினியால் அழிக்கின்றாய்! அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக யாழில் போராட்டம்!!!! - Yarl Voice

அன்று ஆயுதத்தால் அழித்தாய்! இன்று பட்டினியால் அழிக்கின்றாய்! அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக யாழில் போராட்டம்!!!!அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் யாழில் இன்று கவனியீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரையான ஒருமணித்தியாலம் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன் போது எம் தேசத்தை அங்கீகரித்தால் உன் தேசமும் வளம் பெறும், அன்று ஆயுதத்தால் அழித்தாய் இன்று பட்டினியால் அளிக்கின்றாய், சுயாட்சி இருந்தால் மட்டுமே தமிழரின் பொருளாதாரத்தை நாம் மேம்படுத்த முடியும், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமானால் தமிழர் தேசத்தை அங்கீகரி, ஆசியாவின் அதிசயமே பெற்றோல் இல்லை டீசல் இல்லை பால்மா இல்லை, இனவாதம் மதவாதத்தால் பொருளாதாரத்தை அழிக்காதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு கோஷங்களை எழுப்பி இப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

 இப் போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ் உள்ளிட்ட கட்சியின் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post