சார்க் புற்று நோய் நிபுணர்களின் சங்கத்தின் தலைவராக வைத்தியர் ஜெயக்குமார் தெரிவு - Yarl Voice சார்க் புற்று நோய் நிபுணர்களின் சங்கத்தின் தலைவராக வைத்தியர் ஜெயக்குமார் தெரிவு - Yarl Voice

சார்க் புற்று நோய் நிபுணர்களின் சங்கத்தின் தலைவராக வைத்தியர் ஜெயக்குமார் தெரிவுசார்க் நாடுகளின் புற்றுநோய் நிபுணர்களின் சங்கத்தின் தலைவராக மஹரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையின் புற்றுநோய் வைத்திய நிபுணர் நடராஜா ஜெயக்குமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சார் நாடுகளை பிரதிநிதி த்துவப்படுத்தி  நேற்று முன்தினம் இணையவழி   ஊடாக இடம்பெற்ற தலைவர் தெரிவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தற்போது மஹரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் வைத்திய நிபுணராக கடமையாற்றும் வைத்திய நிபுணர் ஜெயக்குமார் தெரிவு செய்யப்பட்டதுடன் செயலாளராக வைத்தியர்  எஸ்.செந்தூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .

தலைவராக தெரிவு செய்யப்பட்ட வைத்தியர் ஜெயக்குமார் யாழ்ப்பாணத்தில் போர் முடிவுற்று மீளத் திரும்பிய காலப்பகுதியில் தெல்லிப்பழையில் புற்றுநோய் பிரிவை ஏற்படுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை  வழங்கியிருந்தார்.

அதுமட்டுமல்லாது வைத்தியத் துறையில் சிறந்து விளங்கியமை மிகக்குறைந்த வயதில் யாழ் மாநகர சபையால் வழங்கப்படும் யாழ் விருதையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.20

0/Post a Comment/Comments

Previous Post Next Post