பயில்வான் ரங்கநாதன் கைது ஆவாரா? பெண்கள் குறித்து ஆபாசமாக பதிவு செய்வதாக புகார் - Yarl Voice பயில்வான் ரங்கநாதன் கைது ஆவாரா? பெண்கள் குறித்து ஆபாசமாக பதிவு செய்வதாக புகார் - Yarl Voice

பயில்வான் ரங்கநாதன் கைது ஆவாரா? பெண்கள் குறித்து ஆபாசமாக பதிவு செய்வதாக புகார்சமூக வலைதளங்களில் பெண்கள் குறித்து தரக்குறைவாக பதிவிடுவதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளர் வன்னியரசு போட்ட டுவீட்டால் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கைது ஆகுவரா? என்று சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருக்கிறார்கள்.

பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூடியூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராகப் பணியாற்றி வருகிறார்.

சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார். 

இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து உள்ளார்.

அதனால் இவருக்கும் சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களுக்கும் இடையயே வாக்குவாதம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது.

அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வரும் எதிர்ப்புகளுக்கும் பதிலடி கொடுத்து தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்து வருகிறார் பயில்வான் ரங்கநாதன்.

மேலும், இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் சினிமா கிசுகிசு பற்றி பேச ஆரம்பித்த பின் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார்.

சமீப காலமாக இவர் நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் எப்படி நடிகர்களுக்கு விவாகரத்து ஆனது என்பது குறித்தும், நடிகைகளுக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்தும் பல்வேறு சர்ச்சைகளை பேசி வருகிறார்.
இந்நிலையில், இவருக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post