இன்றைய தினம் பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவாக பேசிய முஷாரப் எம்.பிக்கு 5000 ரூபாவினை நீட்டிய சாணக்கியன் எம்.பி
பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சியிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த பின்னர், நாட்டின் நிலைமை குறித்தும் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் குறித்தும் முஷாரப் எம்.பி பேசினார்.
அதன்போது அவர் முன் சென்ற சாணக்கியன் எம்.பி ,ஐயாயிரம் ரூபா தாளை நீட்டியபடி அதனை பெற்றுக்கொண்டு பேசுமாறு சைகை செய்தார். இதன்போது சபையில் களேபரம் ஏற்பட்டது.
இதற்கு ஆளுங்கட்சி எம்.பிக்கள் இதன்போது சாணக்கியனுக்கு எதிர்ப்பினை வெளியிட்டனர்.
Post a Comment