மஹிந்தவின் படத்தைக் காட்டி பாராளுமன்றத்துக்கு வந்த நாங்கள் இடைக்கால அரசாங்கத்தை விரும்பவில்லை - மொட்டில் தான் ஆட்சி - Yarl Voice மஹிந்தவின் படத்தைக் காட்டி பாராளுமன்றத்துக்கு வந்த நாங்கள் இடைக்கால அரசாங்கத்தை விரும்பவில்லை - மொட்டில் தான் ஆட்சி - Yarl Voice

மஹிந்தவின் படத்தைக் காட்டி பாராளுமன்றத்துக்கு வந்த நாங்கள் இடைக்கால அரசாங்கத்தை விரும்பவில்லை - மொட்டில் தான் ஆட்சிமஹிந்தவின் படத்தைக் காட்டி பாராளுமன்றத்துக்கு வந்த நாங்கள் இடைக்கால அரசாங்கத்தை விரும்பவில்லை - மொட்டில் ஆட்சி அமைப்பதில் உறுதியாகவுள்ளோம். 

இடைக்கால அல்லது தகுதிகாண் அரசாங்கத்தை அமைக்க விரும்பவில்லை என வனஜீவராசிகள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித் துள்ளார்.

தானும் பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையினரும் மஹிந்த ராஜபக்ஷவின் படத்தைக் காட்டித்தான் பாராளுமன்றத்துக்கு வந்ததாகவும் அவர் கூறினார்.

எனவே, மொட்டில் ஆட்சி அமைப்பதில் உறுதியாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பிரதிநிதிகளுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் நடத்திய கலந்துரை யாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எனினும், இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவது மற்றும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் பங்காளிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இடைக்கால நிர்வாகமொன்று ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி, மகாநாயக்கர்களிடமும் அறிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post