அத்தியாவசிய மருந்துகள் இல்லை! மக்கள் ஆபத்தில் ! யாழில் வைத்தியர்கள் போராட்டம் - Yarl Voice அத்தியாவசிய மருந்துகள் இல்லை! மக்கள் ஆபத்தில் ! யாழில் வைத்தியர்கள் போராட்டம் - Yarl Voice

அத்தியாவசிய மருந்துகள் இல்லை! மக்கள் ஆபத்தில் ! யாழில் வைத்தியர்கள் போராட்டம்



அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

இன்று காலை 8 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்பகுதியில் ஒன்றுகூடிய வைத்தியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தியாவசிய மருந்துகள் இல்லை சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது, இலவச சுகாதாரம் இல்லாது ஒழிக்கப்படுகின்றது, இலவச மருத்துவம் ஆபத்தில் உள்ளது, மருத்துவம் மக்களின் அடிப்படை உரிமை, மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம், சுகாதார வசதிகளை இல்லாதொழிக்க வேண்டாம் போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைத்தியர்களால் தாங்கி பிடிக்கப்பட்டது.

அரசின் மோசமான நிதி நிர்வாகம் காரணமாக அத்தியாவசிய மருந்துகள் இல்லாமல் சுகாதார கட்டமைப்பு சீரழிந்து வருகின்றது என்றும் மக்களின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன என தெரிவித்தும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது

0/Post a Comment/Comments

Previous Post Next Post