தமிழ் தேசிய மக்கள் முன்னணி பதிவு செய்யப்படாத கட்சியாக இருந்தாலும் நம்மை தவிர யாரும் அதை உரிமை கொண்டாட முடியாது என யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் சனிக்கிழமை யா நல்லூர் பகுதியில் அமைந்துள்ள இளம்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்ற தமிழ் கட்சிகளுடனான கலந்துரையாடலுக்கு வருகை தந்த போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்ற தினம் யாழ் நகரப்பகுதியில் நமது கட்சி அலுவலகம் சம்பிரதாயபூர்வமாக பால் காச்சும் நிகழ்வு இடம்பெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை உரிமைகோருவது தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் ஏற்கனவே நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி எமது கட்சியாகும் ஏனெனில் பத்து வருடங்களாக நாமே செயற்படுத்தி வந்தோம்.
இன்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பெரும்பாலான பிரதேச சபை உறுப்பினர்கள் எம்முடன் செயற்படுகிறார்கள்.
வவுனியாவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட கூட்டத்தை நடத்தி இருந்தோம் அதில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் ஆதரவாளர்களை ஒன்றிணைத்து கலந்துரையாடலை நடத்தி இருந்தோம்.
ஆகவே தமிழ் தேசிய மக்கள் முன்னணி எமது கட்சி அதை யாரும் உரிமை கோர முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment