முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்க உண்மையான முஸ்லிம் தலைவர்கள் இல்லை!? யாழில் அமெரிக்க தூதுவரிடம் மௌலவி சுபியான் எடுத்துரைப்பு - Yarl Voice முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்க உண்மையான முஸ்லிம் தலைவர்கள் இல்லை!? யாழில் அமெரிக்க தூதுவரிடம் மௌலவி சுபியான் எடுத்துரைப்பு - Yarl Voice

முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்க உண்மையான முஸ்லிம் தலைவர்கள் இல்லை!? யாழில் அமெரிக்க தூதுவரிடம் மௌலவி சுபியான் எடுத்துரைப்பு




இலங்கையில் முஸ்லிம்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு குரல் கொடுக்க உண்மையான முஸ்லிம் தலைவர்கள் இல்லையென யாழ் மாவட்ட முஸ்லிம் மக்கள் பணிமனையின் தலைவர் மௌலவி எஸ்.ஏ சுபியான் தெரிவித்தார்.

நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஐந்து சந்திப் பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் பணிமனையில் அமெரிக்க துணை தூதர் ஜுலிசுங்கை சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்னும் அவர்கள் முழுமையாக மீளா குடியேற்றம் செய்யப்படவில்லை.

 வடக்கில் முஸ்லிம் மக்களுக்கு நிரந்தர வீடுகள் மற்றும் காணிகள் வழங்கப்படாத நிலையில் இன்னும் அவர்களது வாழ்க்கை இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

இலங்கையில் சிறுபான்மை இனமாக காணப்படுகின்ற முஸ்லிம் மக்களின் பிரச்சனை ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு இதுவரை அமைக்கப்படவில்லை.

 முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எமது இனத்தில் உண்மையான தலைவர்கள் இல்லாத நிலையில் தொடர்ந்தும் எமது பிரச்சினை நீடித்து  வருகிறது.

இவ்வாறான நிலையில் எமது பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக விளக்கக்கூடிய ஆவணத்தை தூதுவரிடம் கையளித்ததுடன் அரசாங்கத்துடன் கலந்துரையாடி தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு  தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post