இலங்கையின் ஓட்டபந்தய வீராங்கனை தற்கொலை!! - Yarl Voice இலங்கையின் ஓட்டபந்தய வீராங்கனை தற்கொலை!! - Yarl Voice

இலங்கையின் ஓட்டபந்தய வீராங்கனை தற்கொலை!!இலங்கையின் மகளிர் தடைதாண்டல் ஓட்டப்பந்தய வீராங்கனை கௌசல்யா மதுசானி நேற்றிரவு தும்மலசூரிய பிரதேசத்திலுள்ள தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு 26 வயது. தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.

நேற்றைய தினம் ஹோமாகம - தியகம மஹிந்த ராஜபக்‌ஷ மைதானத்தில் நடைபெற்ற இலங்கையின் 100வது தேசிய விளையாட்டுப்போட்டியில் 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப்போட்டியில் அவர் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றிருந்தார்.

2019ம் ஆண்டு நேபாளத்தின் காத்மண்டு நகரில் நடைபெற்ற சார்க் விளையாட்டுப்போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டல் மகளிர் பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் சுவீகரித்த குழுவிலும் இவர் இடம்பெற்றிருந்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post