ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதத்தை கையளித்தார் ஜீவன் தொண்டமான் – அரசிற்கான ஆதரவு விலக்கிக்கொண்டது! - Yarl Voice ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதத்தை கையளித்தார் ஜீவன் தொண்டமான் – அரசிற்கான ஆதரவு விலக்கிக்கொண்டது! - Yarl Voice

ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதத்தை கையளித்தார் ஜீவன் தொண்டமான் – அரசிற்கான ஆதரவு விலக்கிக்கொண்டது!தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சரான ஜீவன் தொண்டமான் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் தொண்டமானும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் நேற்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். 

இக்கூட்டத்தில் மலையக பல்கலைக்கழகம் அமைப்பது, தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளம் 1,000 வழங்குவது, உதவி ஆசிரியர்களுக்கான நியமனம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஸ்வரன் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

எனினும், ஜானாதிபதியிடமிருந்து கட்சிக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என இ.தொ.கா அறிவித்துள்ளது.

இதற்கமைய, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், இ.தொ.கா பாராளுமன்றத்தில் சுயேச்சை குழுவாக செயற்படவுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post