பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் மக்ரோன் மீண்டும் வெற்றி - Yarl Voice பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் மக்ரோன் மீண்டும் வெற்றி - Yarl Voice

பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் மக்ரோன் மீண்டும் வெற்றி



பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலின் முதல் கட்டம் கடந்த 10ஆம் திகதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் மக்ரான் உட்பட மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

இமானுவல் மக்ரோனுக்கும், வலதுசாரி வேட்பாளரும், பெண் சட்டத்தரணியுமான மரைன் லு பென்னுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முதல் சுற்றுத் தேர்தலில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை.

இதனால் நேற்று நடந்த பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் கட்டத்தில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் மக்ரோன் 58.2 சதவீதம் வாக்குகள் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.

 இந்நிலையில், இரண்டாவது முறை ஜனாதிபதியாக  மீண்டும் தேர்வு
செய்யப்பட்டதை அறிந்த இமானுவல் மக்ரோன், வாக்களித்த மக்களுக்கு நன்றி  தெரிவித்தார்.

மேலும், இரண்டாவது முறையாக பிரான்ஸ் ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள இமானுவல் மக்ரோனுக்கு பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இத்தாலிப் பிரதமர் மரியோ டிராகி, போர்த்துக்கல் பிரதமர் அண்டோனியோ கோஸ்டா உள்ளிட்ட  பல்வேறு நாட்டுத் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post