மின்சாரம் இன்றி யாழ் பொது நூலகத்தை பார்வையிட்ட அமெரிக்க தூதர் - Yarl Voice மின்சாரம் இன்றி யாழ் பொது நூலகத்தை பார்வையிட்ட அமெரிக்க தூதர் - Yarl Voice

மின்சாரம் இன்றி யாழ் பொது நூலகத்தை பார்வையிட்ட அமெரிக்க தூதர்
யாழ் பொது நூலகத்திற்கு இன்று புதன்கிழமை விஜயம் செய்த அமெரிக்க  தூதர் ஜுலி சுங் சிறிது நேரம் மின்சாரம் இன்றிப் பொது நூலகத்தை பார்வையிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது...

இன்று காலை பதினொரு மணி அளவில் இலங்கை  மின்சார சபையின் மின்சாரம் தடைப்பட்டது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் யாழ் பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

யாழ் பொது நூலகத்தில் இருக்கும் மின்சார இயந்திர பாக்கி திடீரென இயங்காத காரணத்தினால் தூதுவர் குழு சிறிது நேர மின்சாரம் இன்றிப் பொது நூலகத்தை பார்வையிட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது.

பின்னர் மின்சார சபை ஊழியர்களின் உதவியுடன் மின்பிறப்பாக்கி சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் யாழ் மாநகரசபை ஆணையாளர் ஜெயசீலனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது மின்பறப்பாக்கி இயங்காது உண்மைதான் ஆனால் அது உடனடியாக சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது என தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post