காலியிலுள்ள சட்டத்தரணிகள் குழுவொன்று இன்று (20) பிற்பகல் காலியில் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
‘மக்களின் கோரிக்கைக்கு தோட்டாக்களால் பதில் சொல்லாதீர்கள்’ என்று பிரசாரத்தை ஆரம்பித்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள், கோட்டை நீதிமன்ற வளாகத்துக்கு அருகிலிருந்து காலி பஸ் நிலையத்துக்கு முன்பாக பேரணியாகச் சென்று தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்துவது பிரஜைகளின் உரிமை என்றும், இது போன்ற செயல்களில் ஈடுபடும் மக்கள் மீது வன்முறை யைத் தூண்டும் அரசின் முயற்சிக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Post a Comment