தமிழ் மக்கள் சர்வதேச விசாரணை கேட்பதை சிங்கள மக்கள் தற்போது உணர்வார்கள்!!ஜெயந்திரன் தெரிவிப்பு - Yarl Voice தமிழ் மக்கள் சர்வதேச விசாரணை கேட்பதை சிங்கள மக்கள் தற்போது உணர்வார்கள்!!ஜெயந்திரன் தெரிவிப்பு - Yarl Voice

தமிழ் மக்கள் சர்வதேச விசாரணை கேட்பதை சிங்கள மக்கள் தற்போது உணர்வார்கள்!!ஜெயந்திரன் தெரிவிப்பு



தமிழ் மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக சர்வதேச விசாரணையை ஏன் கேட்கிறார்கள் என்பதை தற்போது சிங்கள மக்கள் புரிந்துகொள்வார்கள் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் தேசமானிய அருள் ஜெயந்திரன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி கோட்டபாய தலைமையிலன அரசாங்கத்தை விட்டு செல்லுமாறு நாட்டின் பல பகுதிகளில் சிங்கள மக்கள் போராடி வருகிறார்கள்.

ஜனநாயகப் போராட்டங்களை அடக்குவதற்காகவும் போராட்டங்களில் கிளர்ச்சியை ஏற்படுத்தி கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் பல உத்திகளை பாதித்து வருகிறது.

அதன் அடிப்படையிலேயே ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற மக்கள் ஜனநாயகப் போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில்  பலர் கயமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மக்களின் ஜனநாயகப் போராட்டத்தை ஆயுதமனையில்
 அடக்குவதற்கு தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் அரசாங்கம் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி வருகிறது.

நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட யுத்தத்தில் அப்பாவி பொதுமக்கள் ஆயுதமுனையில் கொல்லப்பட்டதுடன் பலர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்.

அப்போது மௌனமாக இருந்த சிங்கள சகோதரர்கள் தற்போது இந்த அரசாங்கம் தமது பகுதிகளில் இடம்பெறுகின்ற போராட்டங்களை ஆயுத முனையில் அடக்குவதை உணர்வதுடன் அதற்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள்.

ரம்புக்கனையில் போலீசார் நடந்து கொண்ட விதம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக கூறப்பட்ட போதும் முறையான விசாரணை இடம்பெறாது என்பதே எனது கருத்தாகும்.

ஏனெனில் போராட்டத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள் அரசாங்கத்தின் பக்கம் இருக்கின்ற நிலையில் நீதியான விசாரணை இடம்பெறாது.

இதனையே தமிழ் மக்கள் தமக்கு  நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு எதிராக இலங்கையில் நீதி கிடைக்க வாய்ப்பில்லை எனக் கருதி சர்வதேச நீதி வேண்டும் என போராடி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று மூன்று வருடங்கள் கடந்த நிலையில் அதன் சூத்திரதாரி கண்டுபிடிக்கப்படவில்லை.

ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்தே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதாக பேராயர் மல்கம் கூறிய நிலையில் அவருக்கு தாக்குதலின சூத்திரதாரிகள் யார் என்பதும் தெரியும்.

ஊத்தங்கரை தாக்குதல் தொடர்பில் பேராயர் மல்கம் நாட்டு மக்களுக்கு உண்மையை விரைவாகக் கூற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post