அதிபர் ஆசிரியர்கள் நாளை வேலை நிறுத்தம்! இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு - Yarl Voice அதிபர் ஆசிரியர்கள் நாளை வேலை நிறுத்தம்! இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு - Yarl Voice

அதிபர் ஆசிரியர்கள் நாளை வேலை நிறுத்தம்! இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்புநாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் ஆசிரியர்கள் எதிர் கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நாளை அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு என்ற வகையிலேயே நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின்
வலிகாம கிளை செயலாளர் ஜீவானந்தம் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில்
வேலை நிறுத்தத்திற்கு நாடளாவிய ரீதியில் இருக்கக்கூடிய அதிபர்கள் ஆசிரியர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு தர வேண்டியது அவசியமாகும்.


எரிபொருள் விலையேற்றம் எரிபொருள் தட்டுப்பாடு சமையல் எரிவாயு தட்டுப்பாடு முதலிய பல்வேறு பிரச்சினைகளுக்கு நாட்டில் உள்ள மக்களும் அனைவரும் பாரிய பிரச்சனைகளை எதிர் கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தத்தை முன்னெடுத்துள்ளோம்.தூர இடங்களுக்கு பணி நிமித்தம் சென்றிருந்த அதிபர் ஆசிரியர்களுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் இணைப்பு செய்தல் அருகில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களை இணைத்தல் என்ற கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கையில் இருக்கக்கூடிய அனைத்து அரசு ஊழியர்களின் தொழிற்சங்கமும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது அந்த வேலை நிறுத்தத்திற்கு ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு என்ற வகையில் நாம் ஆதரவு வழங்குவதோடு அந்த வேலை நிறுத்தத்திற்கு அதிபர்கள் ஆசிரியர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post