இதன்போது சரவணை பகுதியினை சேர்ந்த ரூபன் ஜதுசா என்ற 11 வயதுச் சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
வீட்டில் இருந்தவர்கள் அயல் வீட்டுக்கு சென்ற சமயம் சிறுமி நீராடுவதற்காக கிணற்றடிக்கு சென்றுள்ளார். இதன்போது கால் தடக்கி கிணற்றுக்குள் விழ்ந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சிறுமியை கிணற்றுக்குள் இருந்து மீட்டு ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது, சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சடலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரேத அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Post a Comment