இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான கொடுப்பனவாக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாளைய தினம் (17) செலுத்தப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
3700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாளை காலை நாட்டை வந்தடையவுள்ளதாக அதன் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு கப்பல் நாளை மறுநாள் நாட்டை வந்தடைய உள்ளது.
இரண்டு கப்பல்களுக்கும் நாளை பணம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
இதற்கமைய, எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி முதல் தினசரி 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.
Post a Comment