ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகவேண்டும் -கருத்துக்கணிப்பில் 96 வீதமானவர்கள் தெரிவிப்பு - Yarl Voice ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகவேண்டும் -கருத்துக்கணிப்பில் 96 வீதமானவர்கள் தெரிவிப்பு - Yarl Voice

ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகவேண்டும் -கருத்துக்கணிப்பில் 96 வீதமானவர்கள் தெரிவிப்பு




ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என 96 வீதமானவர்கள் எதிர்பார்ப்பது டெய்லி மிரரின் கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

ஜனாதிபதியும் பிரதமரும் முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட பெருமளவான மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று வாரங்களாக பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றதை ஏற்று ஜனாதிபதியும் பிரதமரும் முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டுமா மட்டுப்படுத்தப்பட்ட நிபுணர்கள் அமைச்சரவையை ஏற்படுத்த வேண்டுமா என டெய்லி மிரர் எழுப்பிய கேள்விக்கு 96 வீதமானவர்கள் ஆம் என பதிலளித்துள்ளனர்.

2.1 வீதமானவர்களே ஜனாதிபதியும் பிரதமரும் முழு அரசாங்கமும் பதவி விலகக் கூடாது என கருத்து தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post