தீவகத்தில் ஆரம்பிக்கபடவுள்ள மீள்புதுப்பிக்கதகு சக்தி திட்டத்தை யாழ் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் உட்பட்ட தூதரக அதிகாரிகள் நேற்று முன்தினம் நேரடியாக சென்று பார்வையிட்டனர்
யாழ் தீவகப் பகுதிகளான நெடுந்தீவு,அனலைதீவு,நயினாதீவு பகுதிகளில் ஏற்கனவே சீனாவுக்கு வழங்கப்பட இருந்த மீள்புதுப்பிக்கதகு சக்தித் திட்டத்தினை இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்தியா தூதரக அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர்.
குறித்த விஜயத்தில் யாழ் மாவட்ட அரச அதிகாரிகள் மற்றும் தீவக பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
Post a Comment