மஹிந்த பின்னால் சென்றது நான் இல்லை சாணக்கியனே – ரணில் - Yarl Voice மஹிந்த பின்னால் சென்றது நான் இல்லை சாணக்கியனே – ரணில் - Yarl Voice

மஹிந்த பின்னால் சென்றது நான் இல்லை சாணக்கியனே – ரணில்



தான் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தான் ராஜபக்ஷக்களுடன் இருப்பதாக சாணக்கியன் குறிப்பிட்டதாகவும் ஆனால் தான் அவர்களுடன் இருக்கவில்லை என்றும் ராஜபக்ஷ பிரபாகரனுடன் இணைந்து தன்னை தோற்கடித்த நினைத்தார் என்றும் ரணில் கூறியுள்ளார்.

தான் இராசமாணிக்கம் சாணக்கியன் தொடர்பில் ஒரு விடயத்தை தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்ட ரணில்,

 2013ஆம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி அருந்திக்க பெர்ணான்டோ மற்றும் சாணக்கியன் ஆகியோரை சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டாளர்களாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்திருந்தார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, மஹிந்த பின்னால் சென்றது தான் இல்லை என்றும், சாணக்கியனே அவர்கள் பின்னால் சென்றார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்தான் அப்போது ‘மஹிந்த சரணம் கச்சாமி, பெசில் சரணம் கச்சாமி, நாமல் சரணம் கச்சாமி’ என்று அவர்கள் பின்னால் சென்றிருந்தார் என்றும் ரணில் கூறியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post