யாழ்.பல்கலை ஓய்வுநிலை நூலகர் திருமதி ரோகிணி பரராஜசிங்கம் நினைவேந்தல் - Yarl Voice யாழ்.பல்கலை ஓய்வுநிலை நூலகர் திருமதி ரோகிணி பரராஜசிங்கம் நினைவேந்தல் - Yarl Voice

யாழ்.பல்கலை ஓய்வுநிலை நூலகர் திருமதி ரோகிணி பரராஜசிங்கம் நினைவேந்தல்

   

யாழ்.பல்கலை ஓய்வுநிலை நூலகர் அமரர் திருமதி ரோகிணி பரராஜசிங்கம்  அவர்களின்  நினைவு நிகழ்வு இன்று 2.30 மணிக்கு யாழ்.பல்கலை நூலக பதில் நூலகர் திருமதி கல்பனா சந்திரசேகர் தலைமையில் யாழ்.பல்கலை நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் மெளன வணக்கத்தை தொடர்ந்து நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு யாழ்.பல்கலை ஓய்வுநிலை நூலகர் அமரர் திருமதி ரோகிணி பரராஜசிங்கம்  அவர்களின் திருவுருவப் படத்துக்கு மலரஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் யாழ். பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா, முன்னாள் துணைவேந்தர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் கலந்துகொண்டு நினைவுரையாற்றினர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post